கொரோனா பாதிப்பு : நாம் எதிர்பார்ப்பதை விட நீண்ட காலம் நீடிக்கலாம்!

கொரோனா பாதிப்பு : நாம் எதிர்பார்ப்பதை விட நீண்ட காலம் நீடிக்கலாம்!

தேசிய பணி நடவடிக்கை, நாம் எதிர்பார்ப்பதை, நம்புவதை விட நீண்ட காலம் நீடிக்கும் என்றும் இந்த நீண்ட பயணத்திற்கு நோர்வே தயாராக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் Bent Høie கேட்டுக்கொள்கின்றார்.

வார இறுதியில், பொது சுகாதார நிறுவனம்(FHI) மற்றும் சுகாதார நிறுவனம்(Helsedirektoratet) ஆகியவற்றின் சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் விளைவை மதிப்பாய்வு செய்யவுள்ளார்கள்.

வார இறுதி முடிவில், நோர்வேயில் இப்போது நடைமுறையில் இருக்கும் நடவடிக்கைகள், கலைக்கப்படுமா அல்லது தொடருமா என்பதற்கான பதில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் Bent Høie நோர்வே மக்களை, தொடர்ந்து இன்னும் சிறிது காலம் தேசிய பணி பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈஸ்டர் வரை எந்த நடவடிக்கைகள் பொருந்தும் என்பது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் ஆனால், நோர்வே மக்கள் தொடர்ந்து இன்னும் சிறிது காலம் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Dagbladet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments