“கொரோனா” பிடியிலிருந்து விடுபட்ட முதலாவது நோர்வே நாட்டவர்! இத்தாலிய வைத்தியர்கள் மகிழ்ச்சி!!

“கொரோனா” பிடியிலிருந்து விடுபட்ட முதலாவது நோர்வே நாட்டவர்! இத்தாலிய வைத்தியர்கள் மகிழ்ச்சி!!
View of Florence skyline from top view in Italy

இத்தாலியில் தங்கியிருந்த நோர்வே நாட்டவர் ஒருவர், “கொரோனா” பிடியிலிருந்து மீண்டுள்ளதாக இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“கொரோனா” பாதிப்பினால் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த மேற்படி நபருக்கு, மேற்கொண்டு ஆபத்தில்லை எனவும், தனிமைப்படுத்தலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, “கொரோனா” பிடியிலிருந்து வைத்திய சிகிச்சை மூலம் குணமடைய வைக்கப்பட்ட முதலாவது நோர்வே நாட்டவர் இவராவார்.

இதேவேளை, சீனாவில் 103 வயதான பெண்மணியொருவர் “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும், வெறும் ஆறே நாட்களில் அவர் பூரண குணமடைந்துள்ளதாகவும், சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments