கொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 16,060 ஆக உயர்வு!

கொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 16,060 ஆக உயர்வு!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,406,240 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 624,914 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 165,004 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சுக்கு அடுத்தபடியாக கொரோனா தற்போது பிருத்தானியாவில் நிலை கொண்டுள்ளது.

பிருத்தானியாவில் நேற்று 5850 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 16.060 ஆக உயர்ந்துள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments