கொரோனா பிரேசில் : புதிய அழிவுக்கு அஞ்சும் பழங்குடி மக்கள்!

கொரோனா பிரேசில் : புதிய அழிவுக்கு அஞ்சும் பழங்குடி மக்கள்!

பிரேசிலில், குறைந்த நோய் எதிர்ப்பை கொண்ட பழங்குடி மக்களிடையே, கொரோனா வைரஸ் பரவுகின்றது என்றும், இது ஒரு பேரழிவுக்கு வழி வகுக்கும் என்றும் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

பழங்குடி மக்களிடையே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. மேலும், அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்த பகுதியைப் பாதுகாக்க விரைவாக தீர்வுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜோஸ் பேச (Jose Bessa) கூறியுள்ளார்.

தொற்று நோய்களின் பயம் பிரேசிலின் பழங்குடி மக்களின் இதையங்களில் இப்பொழுதும் உள்ளது. முக்கியமாக, இதுபோன்ற நோய்களால்தான் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்கள் வந்த காலகட்டத்தில் பழங்குடி மக்களில் 90 விழுக்காடு மக்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதிருந்து, தொற்று நோய்களின் பாதிப்புகள்தான் பெருமளவிலான மரணங்களுக்கு வழிவகுத்தது. அவற்றில் ஒன்று தான் 1970 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட தொற்றாகும். கொரோனா வைரஸ் மற்றொரு பேரழிவைக் கொண்டுவரும் என்ற அச்சம் இப்போது பிரேசிலின் பழங்குடி மக்களிடையே உள்ளது என்று முன்னணி நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜோஸ் பெஸ்ஸா(Jose Bessa) கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: NRK

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments