“கொரோனா” பீதியை பயன்படுத்தி காசு பார்ப்பவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்! நோர்வே நுகர்வோர் அதிகார மையம் அதிரடி!!

“கொரோனா” பீதியை பயன்படுத்தி காசு பார்ப்பவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்! நோர்வே நுகர்வோர் அதிகார மையம் அதிரடி!!

மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள “கொரோனா” பயத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள முனையும் வர்த்தகர்களுக்கு இலட்சக்கணக்கான நோர்வே குறோணர்களை அபராதமாக விதிப்பதற்கான நடவடிக்கைகளை, நோர்வே நுகர்வோர் அதிகார மையம் எடுத்துள்ளது.

“கொரோனா” பயத்தினால் குழம்பிப்போயுள்ள மக்களிடம், “கொரோனா” வைரசுக்கெதிராக பயன்படக்கூடிய மருந்துகள் என்ற போர்வையில் சில பொருட்களை விற்பனை செய்து பெரும் பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்கு சில வர்த்தகர்களும், இணையவழி வர்த்தகநிறுவனங்களும் முயன்றுள்ளதாக தெரிவிக்கும் மேற்படி நோர்வே நுகர்வோர் அதிகார மையத்தின் இயக்குனரான “Frode Elton Haug”, “கொரோனா” தொடர்பில் மக்களிடம் ஏற்பட்டுள்ள பயத்தை மூலதனமாகக்கொண்டு, பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள முயன்றது தொடர்பில் 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவற்றில் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 2.50.000 இலிருந்து 4.00.000 வரையிலான நோர்வே குறோணர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, www.altshop.no என்ற இணையவழி நிறுவனமானது, “கொரோனா” வைரசுக்கெதிரான விட்டமின் மாத்திரைகள் தம்மால் விற்பனை செய்யப்படுகைன்றன என விளம்பரம் செய்ததால் 2.50.000 குறோணர்கள் அபராதம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள நுகர்வோர் அதிகார மையத்தின் இயக்குனர், “கொரோனா” வுக்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடிய மருந்துகள் எதுவும் தற்போதுவரை பயன்பாட்டில் இல்லையென சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் நிலையில், மேற்படி நிறுவனத்தின் விளம்பரமானது மக்களை ஏமாற்றும் விதத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள