கொரோனா புதைகுழி : இறந்தவர்கள், தொகை தொகையாக குழிகளில் புதைக்கப்பட்டும் அபாயம்!

கொரோனா புதைகுழி : இறந்தவர்கள், தொகை தொகையாக குழிகளில் புதைக்கப்பட்டும் அபாயம்!

நியூயார்க்கில் உள்ள ஹார்ட் (Hart) என்ற சிறிய தீவில், இப்போது பெரும் புதைகுழிகள் கட்டப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளை கவனிக்க முடியாத, உற்றார் உறவினர்கள் இல்லாத, கொரோனா நோயால் இறப்பவர்கள் இங்கு புதைக்கப்படவுள்ளனர்.

இந்த சிறிய தீவானது, பிராங்க்ஸ் (Bronx) மாவட்டத்தைச் சேர்ந்த சிறை முகாம், சிறை மற்றும் சுகாதார நிலையம் ஆகியவற்றை கொண்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக, இது நியூயார்க்கில் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் இல்லாத அல்லது கவனிப்பாரின்றி இறந்தவர்களின் புதைகுழியாக பயன்பட்டு வந்துள்ளது.

சாதாரண காலங்களில், வாரந்தோறும் சுமார் 25 பேர் தீவில் புதைக்கப்படுகின்றார்கள், மார்ச் தொடக்கத்தில் இருந்து, கொரோனா தொற்று மரணங்களின் விளைவாக, இறப்புகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்போது வாரத்திற்கு ஐந்து நாட்களும் ஒவ்வொரு நாளும் 20 க்கும் மேற்பட்டோர் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்று நியூயார்க்கின் அடக்கம் செய்யும் சேவை நிறுவனம் AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது .

நியூயார்க் நகரத்தில் உள்ள வழமையான புதைகுழிகளில் அடக்கம் செய்வதற்கு முடியாத அளவு இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தால், இந்த தீவு ஒரு தற்காலிக புதைகுழியாக பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: NRK

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments