கொரோனா மும்பை: கொரோனா பாதிப்பால் தாராவியில் மேலும் இருவர் உயிரிழப்பு!

கொரோனா மும்பை: கொரோனா பாதிப்பால் தாராவியில் மேலும் இருவர் உயிரிழப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் (Dharavi) கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி (Mumbai -Dharavi)பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவி பகுதியில் கொரோனா ஊடுருவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தாராவியின் முக்கிய இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மும்பை தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் இருவர் இன்று பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments