கொரோனா விதிமுறையை மீறியவருக்கு 20.000 குரோனர்கள் அபராதம்!

You are currently viewing கொரோனா விதிமுறையை மீறியவருக்கு  20.000 குரோனர்கள் அபராதம்!

துருங்கியாவுக்குச் சென்றுவந்த ஒருவர் இரண்டுவாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 21 மார்ச் சனிக்கிழமை பலர் கலந்து கொண்ட ஒன்றுகூடலுக்குச் சென்றுள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் , குறிப்பிட்ட நபரை ஒன்றுகூடலில் இருந்து வெளியேறும் படியும் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.

பல மணி நேரத்தின் பின்னராக மீண்டும் காவல்துறையினர் குறிப்பிட்ட நபரை கண்காணித்த போது, தொடர்ந்தும் ஒன்றுகூடலில் இருந்தமை உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அந்நபருக்கு 20 000 குரோனர்கள் அபராதம் அல்லது 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள