கொரோனா விவகாரம் ; இந்திய – சீனா எல்லையில் இருநாட்டு வீரர்கள் குவிப்பு!

கொரோனா விவகாரம் ; இந்திய – சீனா எல்லையில் இருநாட்டு வீரர்கள் குவிப்பு!

இந்திய- சீன எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சர்வதேச விசாரணை தேவை என்ற உலக நாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளித்ததால், சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது!

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5ம் தேதி இந்திய- சீன ராணுவ வீரர்களிடையே கைக்கலைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக எல்லையில் இருநாட்டு வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இருப்பினும் எல்லையில் பதற்றத்தை தவிர்க்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்ற உலக நாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளித்ததால், சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments