கொரோனா வீரியம் : கேரள பெண்ணுக்கு 36 நாட்களாக கொரோனா!

கொரோனா வீரியம் : கேரள பெண்ணுக்கு 36 நாட்களாக கொரோனா!

கேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து 36 நாட்களாக கொரோனா இருப்பதால் அந்த வைரஸ் எப்படி தீவிரமடைகிறது என்பதே கணிக்க முடியாமல் உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

அந்த மாநிலத்தில் மட்டும் புதிதாக 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பரிசோதனை நடத்தினாலும் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு கொரோனா உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போதும் நலமுடன் உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 400க்கும் அதிகமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் வரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments