“கொரோனா” வுக்கெதிரான மருந்து தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் புதிய நம்பிக்கை!

“கொரோனா” வுக்கெதிரான மருந்து தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் புதிய நம்பிக்கை!

“எபோலா” வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து, “கொரோனா” வுக்கு எதிராகவும் பாவிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் இணை இயக்குனர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“கொரோனா” வுக்கெதிரான முறையான எதிர்ப்பு மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு இன்னும் 18 மாதகாலங்கள் எடுக்கலாமென தெரிவிக்கப்படும் நிலையில், “எபோலா” வைரசுக்கெதிராக முன்னர் தயாரிக்கப்பட்ட “Remdesivir” என்ற மருந்தை “கொரோனா” வுக்கெதிராக பயன்படுத்தி சோதனை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, “கொரோனா” பரவத்தொடங்கியதிலிருந்து அதற்கெதிரான தடுப்புமருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலகளாவிய ரீதியில் ஆய்வாளர்கள் சோதனைகளில் இறங்கியுள்ளனர். இதற்காக சுமார் 300 இருக்கும் அதிகமான ஆய்வுகளை பயன்படுத்திவரும் ஆய்வாளர்கள், பல்வேறு மருந்துவகைகளையும் பரிசோதித்துப்பார்த்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தவேளையில், “எபோலா” வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்தான “Remdesivir” என்ற மருந்து சிறிதளவேனும் பயன்தருமென உலக சுகாதார நிறுவனத்தின் இணை இயக்குனர் “Bruce Aylward”, குறித்த இந்த மருந்து, “கொரோனா” வைரஸை கொல்லாது என்றாலும், அதன் பரவலை கட்டுப்படுத்துமெனவும், அதன் செயற்பாடுகளை மட்டுப்படுத்துமெனவும் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

“Remdesivir” என்ற இந்த மருந்து இன்னமும் பரிசோதனை நிலையிலேயே இருந்துவருவதால், மருத்துவ தேவைகளுக்கு அதனை பயன்படுத்த முடியாது என்றாலும், “எபோலா” மற்றும் “சார்ஸ்” வைரசுக்களுக்கெதிரான தொழிற்பாடுகளை “Remdesivir” என்ற இந்த மருந்து வெளிக்காட்டியதால், “கொரோனா” வுக்கு எதிராக இதனை சோதித்துப்பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

செய்தி மேம்பாடு:

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, நோர்வேயில் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் மேற்குறிப்பிட்ட “Remdesivir” என்ற மருந்தை நோயாளர்கள்மீது பரீட்சித்துப்பார்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

“Remdesivir” என்ற இந்த மருந்து, வைத்திய பாவனைகளுக்காக இன்னமும் அனுமதிக்கப்படாத போதிலும், மிக வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரசை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளுக்காக இந்த மருந்தை பரீட்சித்துப்பார்ப்பதற்கான அனுமதி அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments