கொரோன எதிரொலி : தடகள உலகக் கோப்பை 2022 வரை ஒத்திவைப்பு!

கொரோன எதிரொலி : தடகள உலகக் கோப்பை 2022 வரை ஒத்திவைப்பு!

கோடைகால ஒலிம்பிக் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பை தடகள போட்டிகளுக்கான திகதிகளை 2022 ஆம் ஆண்டில் தேடுவதாக சர்வதேச தடகள சங்கம் (WA) கூறியுள்ளது.

Eugene, Oregon இல் தடகள உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய திகதியுடன் அது நெருங்கி வருவதால் 2022 இற்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

புதிய ஒலிம்பிக் திகதிகளை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டில் தடகள உலகக் கோப்பையை நடத்துவற்கான புதிய திகதியை நிர்ணயிக்க பணியாற்றுவதாகவும் இன்று திங்களன்று WA செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகக் கோப்பை போட்டி அமைப்பாளர்கள் மற்றும் பிற வெற்றிக்கிண்ணப் போட்டி அமைப்பாளர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments