கொறோனா ஆய்வுக்கூடவிபத்தா?

You are currently viewing கொறோனா ஆய்வுக்கூடவிபத்தா?

கடந்த டிசம்பர் 2019 முதல் பரவி இன்று உலகை முற்றுகை இட்டுள்ள கொறோனாவின் தோற்றம் தொடர்பில் சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமல்ல, உலக அரசியல் தலைவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்கூட பல மாறுபட்ட கருத்துக்களும் கோட்பாடுகளும் உண்டு. 

சீனாவின் வூகான் மாகாணத்தில் அமெரிக்காவே இந்நோயை பரப்பியதாக ஒரு கூற்றும், இல்லை சீன ஆய்வுக்கூடத்தில் வவ்வால் மீது செய்யப்பட்ட ஆய்வின்போது ஏற்பட்ட விபத்தே இந்நோய்க்கொல்லி உலகம் முழுவதும் பரவக்காரணம் என்றும் யூகங்களும், பொய்ச் செய்திகளும் கொறோனவிற்கு நிகராக நாளும் போட்டி போட்டுப் பரவிக்கொண்டிருக்கின்றது. 

இதுபோதாதென்று அமெரிக்க அதிபர் பல முறை தன்பேச்சில் கொறோன எனும் சொல்லிற்குப் பதில் சீனவைறஸ் என்றே சுட்டி அழைத்துள்ளார்கள். இது இனத்துவேசமாக இல்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது “இல்லை, இது சீனாவில் இருந்து வந்த கிருமி ஆகவே இது சீனக்கிருமி” என உரைத்திருந்தார் அமெரிக்க அதிபர். 

மேலும் கடந்த நாட்களில் சீனாவில் இருந்து கொறோனா திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிறம்பும் (Donald John Trump) இறுதியாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திரு. மைக் பொம்பெயோ(Mike Pompeo) கருத்து வெளியிட்டிருந்தனர். 

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஏ.பி.சி (ABC) தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் «இயற்கையான முறையில் இந்நோய்தொற்று மிருகத்திடமிருந்து மனிதனிற்கு தொற்றுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை» ஏ.பி.சி தொலைக்காட்சி தனது நிகழ்வில் சீனாவின் வூகான் மாநிலத்தில் அமைந்துள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்நோய் பரிவியதற்கான குறிப்பிடித்தக்க சான்றுகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தது. 

இதனைக் கடந்த செவ்வாய்க்கிழமை சி.என்.என் (CNN) அமெரிக்கத் தொலைக்காட்சி மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது. «ஐந்து கண்கள்» என அழைக்கப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உளவு அமைப்புக்களின் கூட்டணி கொறோனாவின் தோற்றம் ஆய்வுக்கூட விபத்தல்ல, கொறோனா பரவல் ஒரு இயற்கையான செயல், மிருகத்திலிருந்து மனிதனிற்கு தொற்றும் வகையில் இக்கிருமி வளர்ச்சி கண்டிருக்கின்றது என்று தமது கூற்றினை சி.என்.என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

ஐந்து நாடுகளின் «ஐந்து கண்கள்» உளவுத்தகவலைத் தாண்டி அமெரிக்க அரசின் நோய் எதிர்ப்புத்துறை அறிஞர் திரு. அந்தோனி பௌசி (Anthony Fauci) அவர்கள நேசினல் கெயோகிறாபிக் பத்திரிகைக்கு அளித்த செய்வியினை சி.என்.என் சுட்டிக்காட்டியது. அச் செவ்வியில் «பல தகுதிவாய்ந்த உயிரியலாளர்கள் பரிணாம வளர்ச்சியில் சில நுண்ணுயிர்க்கொல்லிகள் கோடுகளைக் கடந்து இப்படி வலுப்பெறுகின்றன என நம்புக்கின்றோம், இது இயற்கையே» என்றார். மேலும் ஆய்வுக்கூடத்தில் இருந்து மனிதனிற்கு இது தொற்றியிருப்பதற்கு சான்றுகள் இல்லை என்றும் தாம் தனிப்பட்டு அப்படி நம்பவில்லை என்றும் திரு. பௌசி தெரிவித்தார். 

சீன அரசு அமெரிக்காவின் குற்றச்சாட்டினை முழுமையாக மறுத்துள்ளதுடன், அமெரிக்க அரசு இப்பெரு நோற்த்தொற்றுக் காலத்தில் உரிய நடவடிக்கையினை எடுத்து, தமது நாட்டு மக்களைக் காக்கும் செயலை செய்யத் தவறிய இயலாமையினையும், அமெரிக்க அரசு வீணடித்த காலத்தை மூடி மறைக்க சீனாவின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவதாக சாடியுள்ளது. 

கூற்றுக்கள் எதுவாயினும் இன்று உலகிற்குப் பெரும் கூற்றனாக கொறோன மாறியிருப்பது உண்மையே!…

தொகுப்பு: சிவமகிழி 

பகிர்ந்துகொள்ள