கொலைகாரர் களமாக மாறும் சிறீலங்கா தேர்தல்!

கொலைகாரர் களமாக மாறும் சிறீலங்கா தேர்தல்!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்து கொடுக்கப்படவுள்ளது. 

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 2005.12.25 அன்று நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையயாப்பமிடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் நேற்று (13) கட்டளையிட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments