கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசு!

கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசு!

யாழ்ப்பாணம்- புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறை காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

பிறந்து 2 நாள்களான சிசுவின் சடலத்தில் தொப்புள் கொடியும் காணப்படுகிறது. கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது. யூரியா பையில் இருந்து சடலம் வெளியேறி நீரில் மிதந்து கொண்டிருந்தது. இன்று காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தட அறிவியல் காவல்த்துறையினர் உதவியுடன் ஊர்காவற்றுறை காவல்த்துறையினர் மேற்கொண்டுள்ளனர் .

சிசுவின் சடலம் தொடர்பில் புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments