கொள்கை மாறாத கஜேந்திரகுமார்! சுகாஸ்

கொள்கை மாறாத கஜேந்திரகுமார்! சுகாஸ்

2010 முதல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த “ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்துவது மட்டுமே நீதியைப் பெற்றுத் தரும்” என்ற நிலைப்பாட்டோடு பத்தாண்டுகளுக்குப் பிறகாவது தமது தவறான நிலைப்பாட்டை மாற்றி எமது நிலைப்பாட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இன்று வந்துள்ளமை இதுவரை பல தோல்விகளுக்கு மத்தியிலும் கொள்கை மாறாது – பதவிகளுக்குச் சோரம் போகாது இலட்சிய வழியில் பயணித்து இறுதியில் வெற்றி கண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அரசியல் சாணக்கியத்திற்கும் தீர்க்கதரிசனத்திற்கும் கிடைத்த வெற்றியாகவும்

தமிழினத்தின் விடிவிற்கான முதற்படியாகவும் அமைகின்றது


இதுவரை அண்ணன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களோடு பயணித்ததையிட்டுப் பெருமைப்படுகின்ற அதேவேளை, எதிர்காலத்தில் கஜேந்திரகுமாரைப் பலப்படுத்தித் தமிழினத்தைப் பாதுகாக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் அணிதிரள வேண்டுமென்று அறைகூவல் விடுக்கின்றோம்…

சட்டவாளர்- சுகாஸ்

பகிர்ந்துகொள்ள