கொள்ளையிட்ட நகைகளை வாங்கிள நகை கடை உரிமையாளர்கள் 4பேர் கைது!

கொள்ளையிட்ட நகைகளை வாங்கிள நகை கடை உரிமையாளர்கள்  4பேர் கைது!

யாழ்.நகரில் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 4 நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

திருடன் ஒருவனை யாழ்ப்பாணப் காவல்துறையினா கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் களவாடப்பட்ட நகைகளை நகைக் கடைகளில் விற்பனை செய்துவிட்டார் எனத் தெரிவித்த நிலையில் திருடனை நகைக் கடைகளுக்கு நேரில் கூட்டிச் சென்ற அவன் இனம்காட்டிய நகைக் கடை உரிமையாளர்களைக் கைது செய்தனர்.

கைது செய்த நகை கடை உரிமையாளர்களில் மூவர் கஸ்தூரியார் வீதியிலும் ஒருவர் மின்சார நிலைய வீதியிலும் கடை நடத்துபவர்கள். ஒரு கடைஉரிமையாளர் மட்டும் 18 கிராம் தங்கத்தை ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments