கொழும்பிலிருந்து 99 பேர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்!

கொழும்பிலிருந்து 99 பேர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்!

கொரொனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்து 99 பேர் தனிமைப்படுத்தலுக்காக இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொழும்பின் சில பகுதிகளில் கொரோனோ தொற்றாளர்கள் இணங்காணப்பட்டு வருகின்ற நிலையில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையிலையே இன்று அதிகாலை கொழும்பிலிருந்து 99 பேர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட 99 பேரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரரணுவ பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட இவர்கள் பலாலியிலுள்ள இராணுவ முகாமில் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதே போன்றே யாழ்ப்பாணத்திலிருந்தும் 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments