கொழும்பில் அதிக கொரோனா தொற்றியது சிகை அலங்கரிப்பு நிலையத்தில்?

கொழும்பில் அதிக கொரோனா தொற்றியது    சிகை அலங்கரிப்பு நிலையத்தில்?

இலங்கையில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியாக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 62 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றிலிருந்தே தொற்று பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரொனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய சிகை அலங்கரிப்பு நிலையத்தில், சிகை அலங்காரம் செய்த 25 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments