கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை!

கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை!


திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தமிழர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

எனினும் குறித்த நபரை கொழும்பிலுள்ள காவல்துறையினர் விசாரித்தமை தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்புக்கு கூலி வேலைக்காக சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளார். ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் சகிந்தன் வயது (29) எனும் இளம் குடும்பஸ்தர் கடந்த 09 ஆம் திகதி சென்ற நிலையில் நான்கு நாட்களாக கொழும்பில் வைத்து காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தேடி வருகிறார்.

எவ்வாறாயினும் இது தொடர்பாக கொழும்பில் உள்ள காவல்துறையினரை தொடர்பு கொண்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை செய்தபின்னர் அவரை அனுப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும் தனது கணவர் போகும்போது நன்றாகத்தான் சென்றார் என்றும் அவருக்கு மனநலப் பாதிப்பேதும் இல்லையெனவும் மனைவி தெரிவிக்கின்றார்.

குடும்ப கஷ்டத்தில் கூலித் தொழிலுக்குச் சென்ற கணவரை கவலையோடு இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தேடிவருவதாகவும் கண்ணீர்மல்க கூறியுள்ளார்

பகிர்ந்துகொள்ள