கொவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு!

You are currently viewing கொவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு!

கொவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.

அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.

கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகரித்த நிலையில் காணப்படுவதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை கடுமையாக கடைபிடிக்கும் நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொதுபோக்குவரத்துகளின் சேவைகளும் நடைபெறவில்லை.

இதேநேரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் செயற்படுவோரை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு தலைமைக பொலிஸாரினால் இன்று காலை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அனைத்து வீதிகளிலும் பொலிஸார் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறுவோரை கண்டறியும் செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் சட்டத்தினை மீறிச்செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 321 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments