கோடைகால நேரமாற்றம் : நினைவில் கொள்ளவும் – 29.03.2020 ஞாயிறு அதிகாலை!

  • Post author:
You are currently viewing கோடைகால நேரமாற்றம் : நினைவில் கொள்ளவும் – 29.03.2020 ஞாயிறு அதிகாலை!

எதிர்வரும் ஞாயிறு 29.03.2020 அதிகாலை இரண்டு மணிக்கு, பனிக்கால நேரமானது கோடைகால நேரத்துக்கு நகரவுள்ளது. அதாவது ஒரு மணிநேரம் முன்னோக்கி நகரவுள்ளது.

2018 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஆணையம் நேரத்தை முன்னும் பின்னுமாக மாற்றும் முறையை ரத்து செய்வதற்கான திட்டங்களை முன்வைத்தது, ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. .

நேரத்தை மாற்றுவது குறித்து பலர் பலவிதமாக சிந்திக்கின்றார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கோடைகால அல்லது குளிர்கால நேரத்தை தங்கள் சாதாரண நேரமாக பயன்படுத்த விரும்புகின்றார்களா என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் எதை செய்ய விரும்புகிறோம் என்பதையும் நோர்வே தீர்மானிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள