சமூகத்துரோகி அருண் சித்தார்த்தன் யாழ். சிறீலங்கா காவல்த்துறையால் கைது!

You are currently viewing சமூகத்துரோகி அருண் சித்தார்த்தன் யாழ். சிறீலங்கா காவல்த்துறையால் கைது!

ராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் சிறீலங்கா காவல்த்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் சிறீலங்கா காவல்த்துறையுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், சிறீலங்கா காவல்த்துறை மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.

இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இவர் நல்லூர் கோவிலை இடித்து  ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தமிழினத்திற்கு எதிரான சமூக குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்ததோடு விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments