சமூகத்தை நேசித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!!

சமூகத்தை நேசித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!!

கரவெட்டியில் குளத்தில் இருந்து நெகிழி கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிரிழந்தார். ,கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயர்தரம் கற்கும் குறித்த மாணவன், சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து நெகிழிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நுணாவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்தார் என்றும், அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கைகைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உண்மையில் மதுபோதையிலும் பாலியல் சேட்டைகளிலும் களவுகளிலும் கடத்தல்களிலும் ஈடுபடும் சமூகத்திற்கு விரோதமான இளைஞர்கள் மத்தியில் சமூகத்தை நேசிக்கின்ற இப்படிப்பட்ட இளைஞர்களை இழப்பது எமக்கான சாபக்கேடாகவே பார்க்கவேண்டும்

பகிர்ந்துகொள்ள