சமூக இடைவெளிக்காக குச்சியை வைத்து மாலை மாற்றிய மணமக்கள்!

You are currently viewing சமூக இடைவெளிக்காக குச்சியை வைத்து மாலை மாற்றிய மணமக்கள்!

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக, மணமக்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றிக்கொண்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
ஆயிரங்காலத்து பயிர் என்று அழைக்கப்படும் திருமணங்கள் தற்போது வேடிக்கையாகவும், வினோதமாகவும் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிக எளிதாக நடத்தப்பட்டு வருகிறன. மணமகள் ஊரடங்கால் வர முடியாத காரணத்தால் மணமகன் காணொளி அழைப்பு மூலம் கைத்தொலைபேசிக்கு தாலி கட்டிய விநோதமான சம்பவங்களும் அரேங்கேறி உள்ளன.

ஆயிரங்காலத்து பயிர் என்று அழைக்கப்படும் திருமணங்கள் தற்போது வேடிக்கையாகவும், வினோதமாகவும் நடைபெற்று வருகின்றது. இந்த வரிசையில் மும்பையை சேர்ந்த ஜோடியும் இடம்பெற்றுள்ளனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அவர்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றும் காணொளி இணையத்தில் வெளியாகி உள்ளது. எளிமையாக நடைபெற்ற அந்த திருமணத்தில் அவர்கள் உறவினர்கள் உட்பட சிலர் மட்டுமே இருந்தனர்.

பகிர்ந்துகொள்ள