சம்பளம் வழங்க டொலர் இல்லை தூதரகங்களை மூடும் இலங்கை!

You are currently viewing சம்பளம் வழங்க டொலர் இல்லை தூதரகங்களை மூடும் இலங்கை!

வரலாற்றில் முதல் முறையாக சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினால், வெளிநாடுகளில் உள்ள மேலும் சில தூதரகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், போலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னரும் அரசாங்கம் சில நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் தூதரக பிரதிநிதி அலுவலங்களை மூடியது.

நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூட அரசாங்கம் தீர்மானித்தது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல தூதரகங்களை மூடுவதற்கு பேரினவாத சிங்கள  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments