சம்பூரில் இளம் குடும்ப தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில்!

சம்பூரில் இளம் குடும்ப தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில்!

திருகோணமலை, சம்பூர் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மூதூர், சம்பூர் 03 பகுதியைச் சேர்ந்த யோகைய்யா நித்தியன் (34) என்பவரது சடலம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

திருமணமாகி 3 மாதங்கள் ஆகிய நிலையில் சம்பூர் பிரதேசத்தில் உள்ள குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments