சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற பாகிஸ்தான் செல்லும் முல்லைத்தீவு மாணவி!

You are currently viewing சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற பாகிஸ்தான் செல்லும் முல்லைத்தீவு மாணவி!

பாகிஸ்தானில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு முல்லைத்தீவு மாணவி இந்துகாதேவி தகுதி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துகளையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து வரும் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வசித்து வரும் கணேஷ் இந்துகாதேவி என்ற மாணவியே பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார்.

இவ்வாறு சர்வதேச குத்துச் சண்டை போடடிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்ப்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments