சர்வதேச விசாரைணயை நடத்தகோரி வடகிழக்கில் போராட்டம்!

சர்வதேச விசாரைணயை நடத்தகோரி வடகிழக்கில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணக்காக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கு தழுவிய போராட்டமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் விடுதியில் இன்று (03) பகல் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்
இதில் கருத்து தெரிவித்த இவர்கள்

ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் 24.03.2020 திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை அரசு கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 கீழ் தீர்மானத்தின் இணை அணுசரணையாளர் என்ற நிலையிலிருந்து விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்து வெளியேறியுள்ளது.

உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதனை பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுட்டிக்காட்டி சர்வதேச குற்றவியல் நீதி மன்ற விசாரணையை வலியுறுத்தி வந்தபோதும் எமது கோரிக்கைகளை புறக்கணிக்கப்பட்டு கால நீடிப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்தது.

இனியும் காலம் தாழ்த்தாது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணக்காக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப் போராட்டத்திற்கு – மத குருக்கள்,பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள்ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திகதி: 09.03.2020 (திங்கட்கிழமை)

நிகழ்வு ஒழுங்குகள் பற்றிய அறிவித்தல் கீழ்வருமாறு

வடக்கு மாகாணம்

மக்கள் எழுச்சி பேரணி காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும்

கிழக்கு மாகாணம்.

மக்கள் எழுச்சி பேரணி
நேரம்: காலை 11.00 மணிக்கு மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்

இம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கான போக்குவரத்து இலவச பேருந்து சேவைகள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு வருகை தருமாறு வேண்டி நிற்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பாளர்
திருமதி.சுகந்தினி தொ.இ. 0778218775

போக்குவரத்து சேவைக்கான தொடர்பாளர்

திருமதி கோகிலமணி தொ.இல 0773650188
திரு தங்கராசா 0775927326
திரு பாஸ்கரன் 0776137923

வடமராட்சி கிழக்கிற்கான தொடர்பாளர்
திருமதி.அருள்மதி தொ இல 0766524715
திருமதி றஜிதா 0764960103

கிளிநொச்சி மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பாளர்
திருமதி.கருணாவதி -தொ.இல. 0774279987.

கிளிநொச்சி மாவட்ட போக்கு வரத்து சேவைகள் .
கிருஸ்ணபுரம் , உதயநகர் மேற்கு, உதய நகர் கிழக்கு, செல்வாநகர் பகுதிக்கான தொடர்பாளர்
சு.இராமசாமி தொ இல 0773749618

ஜெயந்தி நகர், கனகபுரம், கணேசபுரம், திருநகர் ஊடாக புதிய கச்சேரியடி வழியாக ஏ 9வீதி ஊடாக கந்தசுவாமி கோயில் வரையான பேருந்து சேவை ஒழுங்கமைப்பாளர் திருமதி அ.நாகேஸ்வரி -தொ.இல 0762189192

பூநகரி, வலைப்பாடு, கிராஞ்சி, நாச்சிக்குடா போக்கு வரத்து ஒழுக்கமைப்பாளர்
திருமதி.கமலாதேவி -தொ.இல. 0760436388.

வவுனியா மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி.மதிவதனி தொ. இல 0773758489
திருமதி அமுதா தொ இல 076 807 8615.

மன்னார் மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பாளர்
திரு ஜேசுதாசன் தொ.இல 0776708018

தலை மன்னார் தேவன் பிட்டி
திருமதி .ரஞ்சினி தொ இல 0772638399
திருமதி சர்மிளா 0774847106

முல்லைத்தீவு மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பாளர்
திருமதி. மதி – தொ.இல. 077212 3604

வள்ளிபுனம், கைவேலி, உடையார் கட்டு, இருட்டு மடு, தேராவில் விசுவமடு பரந்தன் பகுதி ஒழுங்கமைப்பாளர்
திருமதி.பிருந்தா-தொ.இல. 0775842445

புதுக்குடியிருப்பு சிவபுரம், தேவிபுரம் பேருந்து சேவைக்கான ஒழுங்கமைப்பாளர் திருமதி விதுரா 0772119035

கொக்குளாய், வலைஞர்மடம், மாத்தளன், முள்ளிவாக்கால் மயில் குஞ்சன் குடியிருப்பு பேருந்து சேவைக்கான ஒழுங்கமைப்பாளர் திருமதி.உதயராணி -தொ.இல 077860 4511.

புதிய குடியிருப்பு முல்லைத்தீவு ,முள்ளிவாக்கால் பேருந்து சேவைக்கான தொடர்பாளர்
தயாழினி -தொ இல 0779219368

கிழக்குமாகாணம்

மட்டக்களப்பு

மாவட்ட ஒழுங்கமைப்பாளர்
திருமதி மதனா தொ.இல 0774416872

வாழைச்சேனை , கல்லடி, திருகோணமலை வீதி ஒழுங்கமைப்பாளர் திருமதி.கமலேஸ்வரி தொ.இல. 0779683341
திருமதி சோமாவதி தொ இல 0778362216

கொக்கட்டிச்சோலை செங்கலடி பதுளை வீதி ஊடக மட்டகளப்பு ஒழுங்கமைப்பாளர்
திருமதி சத்தியா 0777397808

மாவடி வேம்பு ,கல்லடி திருகோணமலை வீதி பேருந்து ஒழுங்கமைப்பாளர் திருமதி.லோஜினி- தொ.இல. 0766048447.

நாவல்க்குடா ,கல்முனை வீதி. பேருந்து சேவை ஒழுங்கமைப்பளர் திருமதி. வேவி தொ.இல.0774132484.

அம்பாறை மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பாளர்
திருமதி.தங்கநேசம்- தொ. இல 0777032267

கோலாவில் ஒழுங்கமைப்பாளர் திருமதி.ராஜ்குமாரி –
தொ.இல. 0754144408

பாண்டிருப்பு , கல்முனை ஒழுங்கமைப்பாளர் திருமதி.இந்திரா – தொ.இ.0779906344

திருகோணமலை மாவட்டம்

மாவட்ட ஒழுங்கமைப்பளர்
திருமதி. கைரலி – தொ.இல 0774146861
சாம்பல்தீவு,அலஸ்தோட்டம், சோலையடி, செல்வநாயகபுரம் லிங்கநகர் ஊடாக
கப்பல்துரை, கிண்ணியா ஊடாக மட்டக்களப்பு

முக்கிய குறிப்பு:
மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் தமிழர் தாயக மாவட்டங்களில் போராட்டங்கள் நடாத்திவருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments