சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்!

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு SpaceX நிறுவனத்தின் விண்கலம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 19 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.

நாசாவை சேர்ந்த Robert Behnken மற்றும் Doglas Hurley ஆகிய இரு வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டு கிட்டத்தட்ட 19 மணிநேர பயணத்திற்கு பின் சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தை சென்றடைந்தனர்.

விண்வெளி மையத்தில் அவர்களை அமெரிக்க விண்வெளி வீரர் Christopher Cassidy, விண்வெளி வீரர்களான Anatolij Ivansjin மற்றும் Evan Wagner ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்:

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments