உம்ரா யாத்திரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் 42 பேர் பலி!!!
சவுதிஅரேபியாவில் இந்திய உம்ரா யாத்திரீகர்கள் சென்ற பஸ், எரிபொருள் டேங்கர் மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழப்பு.!!
சவுதிஅரேபியாவில் டீசல் கொள்கலன் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியவைச் சேர்ந்த 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் (ஹைதரபாத்) இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து விட்டதாகவும் உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவுதி அரேபிய மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது






