சாத்தான்குளம் வழக்கில் இரண்டு காவலர்கள் கைது!!

சாத்தான்குளம் வழக்கில் இரண்டு காவலர்கள் கைது!!

சாத்தான்குளம் வழக்கில் இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி புரிந்த முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய இரு காவலர்களை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவரையும் சிபிசிஐடி காவல் துறையினர்  தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments