சார்ஸ் போன்ற மர்ம வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் பலி; 140 பேர் பாதிப்பு!

சார்ஸ் போன்ற மர்ம வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் பலி; 140 பேர் பாதிப்பு!

சீனாவில் சார்ஸ் போன்ற மர்ம வைரஸ் தாக்குதலுக்கு 3வது நபர் பலியாகி உள்ளார்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.  இதற்கு 650 பேர் வரை பலியாகினர்.  வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மரணம் விளைவிக்கும்.

இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் போன்ற மர்ம வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  சார்ஸ் வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த வாரத்தில் 140 பேரிடம் காணப்பட்டு உள்ளது.  தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

இந்த வைரசானது மத்திய நகரான வூஹானில் முதலில் கண்டறியப்பட்டது.  வூஹான் நகரில் மொத்தம் 1.1 கோடி பேர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வைரசின் பாதிப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில், இதுவரை 170 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த