சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்த மருத்துவர்!

சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்த மருத்துவர்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிடம் முறை தவறி நடக்க முற்பட்ட மருத்துவர் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் முள்ளியவளைப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிடம், அங்கு பணியாற்றும் மருத்துவர் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்புரைக்கமைய கொழும்பு சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பன முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

நிர்வாக நடைமுறைக்கு அமைவாக, முதல்கட்ட விசாரணையின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஆரம்பமாகி முதல் 15 நாட்களுக்குள் மாத்திரம் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 34 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சர்ச்சை

2012ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மாத்திரம் இலங்கையில் 5891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments