சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று!

சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று!

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 நெருங்கி வரும் நிலையில் அங்குள்ள 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பாதிப்பு எண்ணிக்கையில் 25 விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பெரும்பாலானோர் நெரிசல் மிகுந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் வசிப்பவர்கள். சிங்கப்பூரின் பாதிப்பு எண்ணிக்கையில் 25 விழுக்காடு பேர் இந்தியர்கள் என்றாலும் அவர்களுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் சிகிச்சைக்குப் பின் அவர்களது உடல்நலம் தேறிவருகிறது. சிங்கப்பூரில் இதுவரை 19,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் உள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments