சிங்களவர்களும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்!

சிங்களவர்களும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்!

முஸ்லிம் மக்களும் முற்போக்கு சக்திகளாக, நீதியின்பாற்பட்டு செய்படுபடுகின்ற சிங்களவர்களும் நாளை வடக்கு – கிழக்கு முழுமையிலும் நடைபெறவுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையிலே நேற்று சாவகச்சேரி சிவன்கோவிலடியிலேயே முழு நேர உண்ணாவிரதப் போராட்டத்தினை தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதேபோல நாளை திங்கட்கிழமை (28ஆம் திகதி) தமிழர் தாயகத்திலே முழுமையான ஹர்த்தால் (கதவடைப்பு) போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மத்தியகுழு இன்று காலையில் அவசரமாகக் கூடி குறித்த போராட்டத்திற்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்துவததோடு மட்டுமல்லாமல் மாவட்ட செயற்பாட்டாளர்கள் ஊடாகவும் தொடர்புகொண்டு போராட்டத்தினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம் என்றும் தெரிவித்த கஜேந்திரகுமார்,

முஸ்லிம் மக்களும் முற்போக்கு சக்திகளாக, நீதியின்பாற்பட்டு செய்படுபடுகின்ற சிங்களவர்களும் நாளை வடக்கு – கிழக்கு முழுமையிலும் நடைபெறவுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments