சிங்கள இராணுவம் கொன்றவர்களது குடும்பங்களிற்கு மிரட்டல்!

சிங்கள இராணுவம் கொன்றவர்களது குடும்பங்களிற்கு மிரட்டல்!

யாழ்.மிருசுவிலில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரியை கோத்தபாய விடுதலை செய்துள்ள நிலையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வான் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள்; தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர்.
மிருசுவில் பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு அப்பாவி எட்டு தமிழ் கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் இராணுவத்தினை சேர்ந்த ஒருவர் மட்டும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது புதிய ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுமுள்ளார்.
இந்நிலையில்; எங்களுடைய வீடுகளுக்கு வெள்ளை வாகனத்தில் வந்து  அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எங்கள் விபரங்களை சேகரித்தக் சென்றிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவருரை தேடி வெள்ளை வாகனத்தில் வந்த நான்கு பேர் விசாரித்துள்ளனர்.அதேபோல் மற்றொருவரின் வீட்டுக்கு கடந்த 11ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் படுகொலை நடந்த இடம் மற்றும் குடும்பத்தில் இறந்தவர்கள் யார்? என்பன போன்ற தகவல்களை பெற்றுச்சென்றிருக்கின்றனர்.
படுகொலை சம்பவத்தில் சிறையில் இருந்த இராணுவ அதிகாரி விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் எங்களுக்கு விடுக்கப்படுகின்றது. இதனையடுத்தே எமது பாதுகாப்பினை வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!