சிங்கள படைகளால் கொடுமைப்படுத்தி படுகொலை செய்த கிருசாந்தியின் 24 ஆம் ஆண்டுகள்!

சிங்கள படைகளால் கொடுமைப்படுத்தி படுகொலை செய்த கிருசாந்தியின் 24 ஆம் ஆண்டுகள்!

இராணுவத்தினரால் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி அவர்களின் 24ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர்

சிங்கள படையினர் தமிழர்களை இனஅழிப்பு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள பல இருந்தும் பாதிக்கப்பட்டர்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுக்கமுடியாத நிலை இன்றும் தொடர்கின்றது.
2009 ஆம் ஆண்டுவரை படையினர் பலரை காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் பல இருந்தும் நீதிகிடைக்காத தமிழர்களாக இன்றும் ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments