சிசுவை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் பேத்தியார் கைது!

You are currently viewing சிசுவை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் பேத்தியார் கைது!

அரியாலை புங்கங்குளம் பகுதியில் திருமணமாகாத இளம் பெண் ஒருவருக்கு பிறந்த சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் அப் பெண்ணின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலை, புங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம்(30) சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதுதொடர்பில் இளம் பெண்ணின் வீட்டுக்கு நேற்றுச் சென்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது சிசு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சிசுவின் சடலம் மீது உடற்கூற்றுப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. உயிருடன் பிறந்த சிசு மூக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தப்பட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிசுவின் தாயாரான இளம் பெண் தனக்கு குழந்தை பிறந்தமை தெரியாது என்று ஆரம்ப விசாரணையில் தெரிவித்த நிலையில் அவரின் தாயாரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதனையடுத்து இளம் பெண்ணின் தாயார் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பகிர்ந்துகொள்ள