சித்தங்கேணியில் குடும்பத் தலைவர் அடித்துக் கொலை! – மகள் படுகாயம்!

You are currently viewing சித்தங்கேணியில் குடும்பத் தலைவர் அடித்துக் கொலை! – மகள் படுகாயம்!

வட்டுக்கோட்டை – சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் குறித்த நபரும் அவரது மகளும் காயமடைந்த நிலையில், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments