சிந்திப்போம் செயற்படுவோம்!!

சிந்திப்போம் செயற்படுவோம்!!

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் தீர்கதரிசனத்தோடு தமிழ்மக்களுக்கான கட்டமைப்பை உலகப்பரப்பெங்கும் உருவாக்கினார், இந்த கட்டமைப்புகளே தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் முப்படைகளை கொண்ட விடுதலைப்போராட்டத்தினை தலைவரும் தளபதிகளும் போராளிகளும் முனைப்போடு நடத்துவதற்கு சக்கரமாக சுழன்றது.


அறிவு பொருளாதாரம் அற்பணிப்பு என்ற முப்பரிமாண செயற்திறன் காரணமாக எமது விடுதலைப்போராட்டத்திற்கான படையணிகளையும் தமிழீழத்தின் உட்கட்டுமானங்களையும் தலைவர் அவர்கள் தனது சிந்தனைக்கூடாக வளர்த்தெடுக்க முடிந்தது.


இந்த சக்தியே இன்றும் எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் தலையிடியாகவும் காச்சலாகவும் இருக்கின்றது.


2009 இற்கு பிற்பாடும் இந்த சக்தியே தலைவர் காட்டியவழியில் தடம்புரளாது தலைவரினதும் மாவீரரினதும் மாண்ட மக்களினதும் கனவை கலையவிடாது தொடர்ச்சியாக குரலெழுப்பிவருகின்றது.

இந்த இயங்குசக்தியை இல்லாதொழிப்பதற்காக பல்வேறு எதிர்சக்திகளை எதிரிகள் உருவாக்கி சுக்குநூறாக சிதைத்து விடுதலைச்சிந்தயையை அழிப்பதற்கு முயன்றார்கள் முடியவில்லை

ஆனால் பலவீனப்படுத்தினார்கள் என்பது யாவரும் அறிந்ததே


2009 இற்கு பிற்பாடு தலைவர் அவர்கள் அரசியல்தலைவனையோ அல்லது தலைவருக்கு அடுத்தபடியாகவோ ஒருவரையும் இனம்காட்டாமல் விட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அதாவது ஒருவனை இனம்காட்டினால் எதிரிகள் அவனை விலைக்கு வாங்கி ஒட்டுமொத்த கட்டமைப்புகளையும் உடைத்துவிடுவார்கள் என்பதுதான்.


எப்படி தாயகத்தில் அரசியல் பலத்தை தனி ஒருவரால் அடிவருடி அரசியலாக்க முடிந்ததோ
அப்படியான சூழல் புலத்திலும் நிச்சயமாக உருவாகி இருந்திருக்கும்.

இங்கே கட்டமைப்புகளாக இயங்கியதன் காரணமாக கடுமையான விவாதங்களுக்கு மத்தியில் இயலாமைக்கருத்துடையவர் கரைந்துபோக உறுதியோடு நிற்பவர் இன்றும் எமது விடுதலைப்போராட்டத்தின் கருத்தியலின் இயங்குசக்தியாக இருந்துவருகின்றார்கள் இங்கும் குறுநில மன்னர்களின் சிந்தனையின் வெளித்தோன்றல் தலைநீட்டுவதை மறுப்பதற்கு இல்லை ஆனாலும் கட்டமைப்பாக இயங்குவதால் இப்படியான சிந்தனை கொண்டவர்கள் அழிந்துபோனதுதான் வரலாறு


இங்கே தமிழ்மக்களாகிய நாங்கள் செய்யவேண்டியது இக்கட்டமைப்புகளை பாதுகாத்து அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பதுதான் இதை செய்யத்தவறும்பட்சத்தில் எமது இருப்பிற்கான கருத்தியலில் காவி படிந்து
காலநீடிப்பே எம்மை கவ்விக்கொள்ளும்.

பகிர்ந்துகொள்ள