சினம்கொள்!

சினம்கொள்!

சினம்கொள் மண்ணின்
சமகால வாழ்வியலின் தரிசனம்!
உரிமைப்போரின் வேரினை
அணைத்தெடுக்கும் ஆணிவேர்!
விடுதலைக்காய் பயணித்தவனின்
மாண்பின் மகுடம்!
மண்ணினை மானசீகமாக இன்னும் காதலிக்கும் போராளின்
கோபம்!
புனர்வாழ்வு பூதத்தின் பிடியிலிருந்து
வெளிவந்த போதும்
இன்னும் உயிரை பறித்துக்கொண்டிருக்கும் மெல்ல கொல்லும் விசத்தின் சாட்சி!
திட்டமிட்ட அடுத்த சந்ததிகள் மீதான
சமூகச்சீர்கேடுகள்!
தமிழ்த்தேசியப்பணியில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை
தவறாகப்பயன்படுத்தும்
துரோகத்தின் பிம்பம்!
தாய்மண்ணை சூறையாடும்
கறையான்கள் மீதான வேட்டை!
இத்தனை அம்சங்களையும் சுமந்து
இலட்சியப்பற்றுதியை பாடும்
எழுச்சியின் வடிவம்!
எல்லோரும் பார்க்கவேண்டிய
ஈழத்திருநாட்டின் அகம்!
இனி திரையரங்குகளில் நீங்கள்
காட்டவேண்டியது
உங்கள் முகம்!
நோர்வேயில் ஐநூறு பேருக்கு மேல்
ஒரே காட்சியில்
ஒன்று கூடிய
மகிழ்ச்சி!
இதில் பங்கெடுத்த அத்துணை
கலைஞர்களுக்கும்
எங்கள்
நல்வாழ்த்துக்கள்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!