சிறப்பாக நடைபெற்ற அன்னை பூபதி கலைக்கூட மாணவர்களின் மெய்வல்லுனர் போட்டிகள்!

You are currently viewing சிறப்பாக நடைபெற்ற அன்னை பூபதி கலைக்கூட மாணவர்களின் மெய்வல்லுனர் போட்டிகள்!

அன்னை பூபதி தமிழ்ச் செயற்பாடு மற்றும் கலாச்சார மையத்தின் ஒழுங்கமைப்பில் வைத்வெத், குறூரூட்டாலென் மற்றும் திறம்மன் வளாகங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் மிக விறுவிறுப்பாக ஸ்ரொவ்னர் மைதானத்தில் நடைபெற்றிதிருந்தது.

இவ்விளையாட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக நோர்வேயில் தமிழ்மக்களுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்ற திருமிகு, எயிட்டன் வின்சன் பங்கெடுத்து விளையாட்டின் முக்கியம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இவர் நோர்வேயிலும் சர்வதேச நாடுகளிலும் ஒட்டங்களிலும் அஞ்சல் ஒட்டங்களிலும் சாதனை படைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது அவரின் சாதனைகளை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

https://worldathletics.org/athletes/norway/aiden-floyd-vincent-14926633

இத்தோடு இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நோர்வே தமிழ் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் திருமிகு சுமதி விஜயராஜ் அழைக்கப்பட்டிருந்தார், அத்தோடு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ,தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்முரசம் வானொலி போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுகள் இரவு 7 மணிவரை சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றிருந்ததோடு மாணவர்களின் ஆளுமைகளும் வெளிப்பட்டிருந்தது, மாணவர்களுக்கு பக்கபலமாகவும் உந்துசக்தியாகவும் பெற்றோரும் ஆசியர்களும் தங்களின் சிறப்பான கூட்டுமுயற்சிகளையும் வெளிப்படித்தி இருந்தததை கண்கூடாக பார்க்க முடிந்தது.

இந்நிகழ்வில் அன்னை உணவகத்தின் சேவை அளப்பரியதாகவும் ஆனந்தமான ருசியான உணவுத்தயாரிப்புகளாகவும் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply