சிறிலங்காவில் 1089 பேராக உயர்ந்த கொரோனா தொற்றாளர் தொகை!

சிறிலங்காவில் 1089 பேராக உயர்ந்த கொரோனா தொற்றாளர் தொகை!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இரவு 10.45 மணியளவில் 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சேர்த்து நேற்றைய தினம் 21 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

அத்துடன், நேற்று 40 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து சென்றுள்ளனர். இதுவரை 660 பேர் இவ்வாறு பூரண குணமடைந்துள்ளனர் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 420 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றாளர்களாக நேற்று இனங்காணப்பட்ட 21 பேரில் 19 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments