சிறிலங்காவை துரத்தும் கொரொனா மரணங்கள்: இன்று மேலும் இருவர்

சிறிலங்காவை துரத்தும் கொரொனா மரணங்கள்: இன்று மேலும் இருவர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 704 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறை சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள