சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்!

சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்!

தமிழ் மக்களையும் ஒரு தேசிய இனமாக கருதி சமவாய்ப்பு – சம அந்தஸ்து தராமல், மொழி உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, வழிபாட்டு உரிமை, வாழ்வுரிமை இவற்றை பறித்து, இனத்துவ அடிப்படையில் கலவரங்களையும், தாக்குதல்களையும், சித்திரவதைகளையும், படுகொலைகளையும் சிங்களப் பெருந்தேசிய வாதம் நிகழ்த்தி உடல் – உளக் காயங்களையும், சொத்தழிவுகளையும் நடத்திய படியினால் தான், தமிழ் தேசிய இனம் தமக்கு என்று ஒரு பாதுகாப்பான வாழ்க்கை, சுயமரியாதை, சுயகௌரவம் கருதி ஒரு தேசமாக சிந்தித்து ஒரு ஆயுதப் போராட்டத்துக்கான தேவை எழுந்தது.

சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 1
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 2
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 3
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 4

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறீலங்கா அரசு தமிழ் இனப்படுகொலையில் கொண்டு சென்று முடித்திருந்தாலும், தமிழ் மக்கள் ஒரு தேசம் – ஒரு தேசிய இனமாக இப்போதும் கருதுகிறார்கள் என்பதில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 5
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 6
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 7

சிங்கள பெருந் தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் அறவழிப் போராட்டங்களை நடத்தி தமது அரசியல் அபிலாசைகள், விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதை தடுப்பதற்காக, சிறீலங்கா அரசு நீதி பரிபாலனக் கட்டமைப்பைக் கூட ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக பாவித்து வருவதையே அண்மைக்கால நீதிமன்ற தடை உத்தரவுகள் காட்டுகின்றன.

சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 8

சிறீலங்கா அரசு ஆனது, பலதரப்பட்ட அரசாங்க திணைக்களங்களையும் காலம் காலமாக பல்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தியே வந்திருக்கிறது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுச்சூழல் சுற்றாடல் அதிகார சபை, வனவள பாதுகாப்பு திணைக்களம், கனிய வளங்கள் திணைக்களம், சுவடிகள் மரபுரிமை திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வனவிலங்குகள் பறவைகள் சரணாலய பாதுகாப்பு அதிகார சபை இப்படிப்பட்ட பெயர்களில் தமிழ் மக்களுக்கு எதிரான நில அபகரிப்புகள், ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கட்டமைப்பு சார் இனப்படுகொலையை இவ்வாறான பச்சை ஆக்கிரமிப்புகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்கிறது. இதில் தற்போது நீதி பரிபாலன கட்டமைப்பும் உட்புகுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 9
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 10
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 11
சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்! 12

சிறீலங்கா அரசாலும் அதன் துணை ஆயுதக் குழுக்களாலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையைக் கண்டறியவும், நீதி மற்றும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும் 1448 நாட்களாக வீதி ஓரத்தில் இருந்து போராடும் தாய்மார்களை வன்மமாக பார்ப்பதும், காலம் கடத்திக் கடத்தி சாட்சியங்களான இவர்களை முதுமைக் கால நோய்களால் இறக்க விடுவதும் மிகவும் மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்கள் ஆகும். சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உச்சபட்ச ஒடுக்குமுறை வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். நாங்கள் சிறீலங்கா அரசின் இத்தகைய ஜனநாயக போக்குகளை வன்மையாக கண்டிப்பதோடு, சிறீலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்கள் ஆகிய நாங்கள் எமது மரபுவழி பண்பாட்டு – வரலாற்று ரீதியாக இம்முறையும் கரிநாளாகவே கடைப்பிடிக்கின்றோம். அத்தோடு சமரசம் அற்ற – விலை போகாத உன்னதமான தமிழீழ விடுதலைப் போராட்ட கொள்கை கோட்பாட்டு தத்துவத்தின் அடிப்படையில், எவராலும் நீர்த்துப் போகச் செய்யப்பட முடியாத தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி, எத்தனை தடை வரினும் ஓயாத அலையாக தமிழ் தேசிய இனம் சுழன்றடித்து தமது விடுதலைக்காகப் போராடும் என்பதையும் இந்நாளில் சிங்கள நாட்டின் ஆட்சியாளர்களுக்கு முரசறைந்து அறிவித்து பிரகடனம் செய்கின்றோம்.

செயலாளர்,
கோ.ராஜ்குமார்,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம்.

போராடும் அனைத்து தாய்மார்களுக்கும் அமரர் திருமதி நாகலிங்கம் மனோன்மணி அவர்களின் ஓராண்டு நினைவாக அவரது குடும்பத்தினர் தமிழ்முரசம் வானொலி ஊடாக உதவி வழங்கியுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள