சிறீலங்காவில் இதுவரை 751 பேருக்கு தொற்று 8 பேர் உயிர் இழப்பு!

You are currently viewing சிறீலங்காவில் இதுவரை 751 பேருக்கு தொற்று 8 பேர் உயிர் இழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 19 பேர் நேற்றிரவு இனங்காணப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 751ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 33 புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 31 பேர் கடற்படையினர் என்றும், ஏனைய இருவரும், தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்றும், இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள