சிறீலங்காவில் எகுறும் கொரோனா தொற்று! பீதியில் மக்கள்!

You are currently viewing சிறீலங்காவில் எகுறும் கொரோனா தொற்று! பீதியில் மக்கள்!

இலங்கையில் கொரோனா அவல நிலை அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 313 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த கொவிட்-19 மரணங்கள் தொடர்பான அறிக்கைகளின் அடிப்படையில் இவ்விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

ஓக்ஸ்ட் – 01 – 63 பேர்

ஓக்ஸ்ட் – 02 – 74 பேர்

ஓக்ஸ்ட் – 03 – 82 பேர்

ஓக்ஸ்ட் – 04 – 94 பேர்

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 4 நாட்களில் பதிவாகியுள்ள கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 313 பதிவாகியுள்ளன.

இதேவேளை தற்போதைய நிலையில் இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களுடைய மொத்த எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாத்தில் 1388 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் 4 நாடகளிலேயே 313 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கையில் கொரோனாத் தொற்று நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் மேலும் 2674 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (ஓகஸ்ட்-05) இவ்வாறு 2674 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments