சிறீலங்காவில் ஒரே நாளில் 156 பேர் மரணம்!

You are currently viewing சிறீலங்காவில் ஒரே நாளில் 156 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் 156 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

நேற்று உயிரிழந்தவர்களில் 87 ஆண்கள் மற்றும் 69 பெண்கள் அடங்குகின்றனர்.

அத்துடன், நேற்று இறந்த 156 பேரில் 121 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இவற்றுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டை முடக்காவிட்டால் தினசரி கொரோனா மரணங்கள் தாறுமாறாக அதிகரிக்கும் என சுகாதார வல்லுநர்களின் எச்சரிக்கைகளை அரசு பொருட்படுத்தாத நிலையில் நாடு உச்ச கட்ட அபாயத்தை நோக்கி்ச் சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments