சிறீலங்காவில் தொடர்ந்து 26 நாட்களுக்கு ஊரடங்கு?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு தரப்பினரும் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு அமைவாகவே, அரசாங்கம் இதுதொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது. நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 6ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில், அரசாங்கம் ஆலோசித்து வருவதைப்போல, ஊரடங்கு சட்டம் இம்மாதம் நிறைவடையும் வரையிலும் அமுல்படுத்தப்படுமாயின், இன்னும் 26 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments